41 வயதான நயனுக்கு விக்கி கொடுத்த விலை உயர்ந்த பரிசு
நேற்றைய தினம் 41வது பிறந்தநாளை கொண்டாடிய தனது காதல் மனைவியான நடிகை நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
அதாவது, நயனுக்கு 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி பரிசளித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
ரோல்ஸ் ராய்ஸின் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்ட்ரே காரை பரிசளித்திருக்கிறார்.
அந்த கார் முன் நயன்தாரா மற்றும் தனது குழந்தைகள் இருவரும் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே, “எண்ணம் போல் வாழ்க்கை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது உயிர் நயன்தாரா. நீ பிறந்த தினம் வரம். உண்மையாக, வெறித்தனமாக, ஆழமாக என் அழகி உன்னை நேசிக்கிறேன்.” என்று பெரிய பதிவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், 2023-ல் சுமார் ரூ. 3 கோடி விலை கொண்ட மெர்சிடிஸ் மேபேக் காரை வாங்கினர்.
2024-ல் ரூ. 5 கோடி விலை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரை வாங்கினார். இதற்கிடையே தான் தற்போது 10 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி பரிசாக அளித்திருக்கிறார்.
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனமாக தயாரித்தது தான் இந்த ‘பிளாக் பேட்ஜ் ஸ்பெக்ட்ரே’ மாடல் கார்.
வெறும் மின்சார கார் என்பதை தாண்டி இந்தக் காரை ‘நடமாடும் அரண்மனை’ என அழைக்கின்றனர்.
இந்தியாவில், இந்த மின்சார கூபே-வின் தோராயமான எக்ஸ்-ஷோரூம் விலை 9.50 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் உலகளாவிய சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள மின்சார கார்களில் உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கார் என்ற பெயரை பெற்று தனித்து விளங்குகிறது இந்த பிளாக் பேட்ஜ் ஸ்பெக்ட்ரே.
அப்படியான காரை தான் தனது காதல் மனைவியான நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசாக விக்னேஷ் சிவன் பரிசளித்திருக்கிறார்.






