நண்பேன்டா… காரை பரிசாக கொடுத்த பிரதீப் ரங்கநாதன்
தனது நண்பரும், இணை இயக்குநருமான ரமேஷ் நாராயணசாமிக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
‘கோமாளி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் நடிகனாக ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இதில் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலித்து ஹெட்ரிக் சாதனையை படைத்தார்.

இந்த நிலையில், அவருடைய திரைப்படங்களில் சிறு வேடங்களிலும், இணை இயக்குநராகவும் பணியாற்றிய ரமேஷ் நாராயணசாமிக்கு நேற்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்த, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரமேஷ் நாராயணசாமி பகிர்ந்துள்ள விடியோவில், உங்களுடைய விசுவாசத்திற்கு எனது சின்ன பரிசு என நடிகர் பிரதீப் கூறுவது பதிவாகியுள்ளது.

(Visited 2 times, 2 visits today)





