லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் ஸ்பெஷல்…!
பாலய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இவருடைய நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் சிறிதளவேனும் லாஜிக் இருக்காது. ஆனால் இதை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூடுவார்கள்.
இந்த நிலையில், நடிகர் பாலய்யாவின் 111 ஆவது திரைப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். வரலாற்று கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் பாலய்யாவின் 111 ஆவது படத்தில் பிரபல நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் இன்று சிறப்பு விடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, நடிகர் பாலய்யா மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் ஜெய் சிம்ஹா, ஸ்ரீ ராம ராஜ்ஜியம் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





