பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் திவாகர் வெளியிட்ட அதிரடி தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் கடந்த வார டபுள் எவிக்ஷனில் பிரவீனும், துஷாரும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.
இவர்களை தொடர்ந்து, இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பெண்களைப் பற்றிய முறைகேடு பேச்சுகள், சாதி சார்ந்த விமர்சனம் போன்ற காரணங்களே இவர் வெளியேற காரணம் கூறப்படுகிறது.
நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், எவிக்ஷனுக்குப் பிறகு தன்னுடைய முதல் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “என்னை குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. நான் பொதுவாக சொல்லிய சில கருத்துகள் என்மீது அவதூறாக பரப்பப்படுகின்றன. ஒருவர் சோஷியல் மீடியாவில் வளரும்போது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது சாதாரணம். இந்த பிரச்சனையில் என்னை பலிகடா ஆக்க முயற்சிப்பது சாத்தியமே இல்லை. எனக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது” என்று பேசியுள்ளார்.





