சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கச் சுரங்கம்
சீனாவில் மிகப்பெரிய தங்கப் படிமங்கள் அடங்கிய சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1949ஆம் ஆண்டின் பின்னர் வடகிழக்கு லியோனிங் (Liaoning) மாகாணத்தில் இந்தச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சீனாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சுரங்கத்தில் சுமார் 1500 டன்னுக்கும் (tonne) அதிகமான தங்கம் உள்ளதாக அமைச்சின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 720 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 2.586 பில்லியன் டன் தாதுக்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாதுக்களில் ஒரு டன்னுக்குச் சராசரியாக 0.56 கிராம் தங்கம் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 மாதங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்தத் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கனிம வளக் கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் உயர்தரக் கனிம ஆய்வுக்கு வலுச்சேர்க்கும் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





