பிரபல நடிகை அதிதி ராவ் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரபல நடிகை அதிதி ராவ் தனது பெயரை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதில் வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசுவதாக தெரிவித்துள்ளார்.
தனது டீம் மூலமாவே தான் அனைத்தையும் செய்வதாகவும், தனிப்பட்ட இலக்கத்தை இதற்காக பயன்படுத்துவது இல்லை எனவும் அதிதி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அது நான் இல்லை, அந்த நம்பரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என அதிதி இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.






