40 நாட்களுக்கு திவாகர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சுமார் 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதுதான் போட்டி சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.
20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஷோவில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடத்தப்பட்டு போட்டியாளர்கள் குறைக்கப்பட்ட போதும், திடீரென 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே சென்றனர்.
ஆரம்பத்திலிருந்தே போட்டி சரியில்லை, போட்டியாளர்கள் சரியில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியும் அனைவருக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையில், இந்த வாரம் Watermelon திவாகர் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்
இந்த வீட்டில் பார்வதி சொல்லும் சொல்லுக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருப்பவராக இருந்த திவாகர் ரீல்ஸ் செய்யும் போதும், பாட்டில் டாஸ்க்கின் போது மட்டுமே தனியாக தெரிந்தார்.
பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் என மொத்தமாக 40 நாட்களுக்கு திவாகருக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.






