சுந்தர் சி விலகியதற்கான காரணத்தை போட்டுடைத்தார் கமல்
பெரும் எதிர்பார்பார்ப்பை ஏற்படுத்தியது தான் ரஜினி – கமல் – சுந்தர் சி கூட்டணி. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் சுந்தர் சி இந்த கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் சுந்தர்.சி நிராகரித்தது ஏன் என்பதற்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
“எனது தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது குறித்து அவர் கருத்து தெரிவித்துவிட்டார். எனது கருத்து என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது.
அதைத்தான் தற்போது பண்ணி வருகிறோம். ரஜினிகாந்த்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம். புதிய இயக்குநர்களுக்கும் இதில் வாய்ப்பு இருக்கிறது. கதை நல்லா இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
நானும் ரஜினிகாந்த்தும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில் அவர் மட்டும் நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்றார்.






