சுந்தர்.சி விலகியதற்கு காரணம் என்ன? ப்ளூ சட்டை மாறனின் டுவிட்
ரஜினியை வைத்து சுந்தர்.சி படம் இயக்குவதாக படத்திலிருந்து அவர் வெளியேறியதற்கு பலரும் பல காரணங்களை சொல்கின்றனர்.
இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதுகுறித்து ட்வீட் போட்டிருக்கிறார்.
“ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் செய்து தருவதுதான் சுந்தர்.சியின் பாணி. அதற்கு கமல் ஒப்புக்கொள்ளவில்லையா? தாதா கேரக்டர் படங்கள் தமிழில் தோல்வியாகி வருவதால் ஜாலியாக படம் பண்ண நினைத்த தலைவரின் எண்ணம் பலிக்காமல் போனதா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கிடையே சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து அடுத்து யார் இயக்குநர் என்ற கேள்வியும் உண்டாகியிருக்கிறது.
முதலில் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது அந்த லிஸ்ட்டில் தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பெயரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.





