2050ஆம் ஆண்டில் அதிகரிக்கவுள்ள குளிரூட்டிகளின் பயன்பாடு – ஆபத்து குறித்து ஐ.நா எச்சரிக்கை
2050 ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் குளிரூட்டிகளின் (AC) தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பூமியின் வெப்பநிலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டியின் தீவிர பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குளிரூட்டும் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்ப வாயு (Greenhouse Gas) சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக காலநிலை மாற்றத்தில் பாரிய மாறுபாடுகள் ஏற்படும் என ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் (UN Environment Programme – UNEP) குறிப்பிட்டுள்ளது.
குளிரூட்டிகளுக்கு மாற்றீடாக நிலையான தீர்வு ஒன்ற காண்பது அவசியமாகும்.
வெப்பத்தை தணிக்க மக்கள் குளிரூட்டிகளை நாடுவதை தவிர்க்க முடியாது. எனினும் கரியமில வாயுவை வெளியேற்றாத மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என, ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் வலியுறுத்தியுள்ளது.





