நியூயோர்க்கில் மீண்டும் ஜோடியாக சிக்கிய அனிருத் – காவ்யா மாறன்
பிரபல இசையமைப்பாளரான அனிருத், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வாரிசு காவ்யா மாறனுடன் நியூயோர்க்கில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புதிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின்றது.
இருவரும் காதலிப்பதாக முன்னர் வதந்திகள் வந்தாலும், அனிருத் அதை தெளிவாக மறுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த வதந்திகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளன.

இப்போது இருவருக்கும் இடையிலான உறவு குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ஒரு பிரிட்டிஷ் யூடியூபர் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அனிருத் ரவிச்சந்தரும் காவ்யா மாறனும் சாதாரண உடையில் சிரித்துக்கொண்டே நடப்பதைக் காணலாம்.
எந்த ரசிகரும் அவர்களை அணுகவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வெளியான சில மணி நேரங்களுக்குள், இந்த வீடியோ வைரலானது. இதற்குப் பிறகும், இந்த விஷயம் குறித்து இருவரும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
அனிருத் மற்றும் காவ்யா ஒன்றாக இருப்பது இது முதல் முறை அல்ல. அவர்கள் முன்பு பல முறை பொதுவில் ஒன்றாகக் காணப்பட்டனர். கடந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் வந்தன. பின்னர் அனிருத் இதை மறுத்திருந்தார்.






