“என் வாழ்க்கையில் விஜய் இருப்பது ஒரு ஆசீர்வாதம்” கண்ணீருடன் ராஷ்மிகா
நேஷனல் கிரஷ், சென்சேஷனல் கிரஷ் என்றெல்லாம் அன்பாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார்.
சமீபத்தில், படத்தின் வெற்றி விழாவை தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர், இதில் விஜய் தேவரகொண்டா விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் ராஷ்மிகா தனது உரையின் போது,
தி கேர்ள்ஃப்ரெண்ட்’ தனது வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார். தனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து, கடைசியாக முக்கியமாக, விஜய் தேவரகொண்டா பற்றி பேசியுள்ளார்.
“விஜ்ஜு இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒரு பகுதியாக இருந்து வருகிறார், இன்று அவர் வெற்றி விழாவிலும் இருக்கிறார். அவர் இந்த முழு பயணத்திலும் ஒரு பகுதியாக என்னுடன் இருக்கிறார். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு ஆசீர்வாதம்.” என்று கண்ணீர் விட்டார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தங்கள் உறவு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை என்றாலும், அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், பெப்ரவரி 2026 இல் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.
அவர்கள் பொதுவில் தோன்றும் போதெல்லாம் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி தெளிவாகத் தெரிகிறது. இதேவேளை, வெற்றி விழாவிலும் ரஷ்மிகாவின் கைகளை மெதுவாகப் பிடித்து முத்தமிட்டார் விஜய்.
இது ஒன்று போதாதா இவர்களின் காதலை புரிந்துகொள்வதற்கு.






