ராஜமவுலி படத்தில் பிரியங்கா சோப்ராவின் புதிய போஸ்டர் வெளியானது
‘ஆர்ஆர்ஆர்’ என்ற பிரம்மாண்டமான படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த நிலையில், பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் 15-ம் திகதி பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அண்மையில் இந்தப் படத்தின் வில்லன் பிருத்விராஜின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும், ஸ்ருதிஹாசன் பாடியுள்ள ‘சம்ஹாரி’ பாடல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மஞ்சள் நிற புடவையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் ராஜமவுலி, “இந்திய சினிமாவை உலக அரங்கில் மறு வரையறை செய்த பெண். மீண்டும் இந்திய சினிமாவுக்கு வரவேற்கிறேன். மந்தாகினியின் பல சாயல்களை உலகம் காண ஆவலுடன் காத்திருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.






