“ஜெய்லர் 2” மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பும் நடிகை
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
ஜெய்லர் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக், யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் ஜெய்லர் 2 இலும் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த, மோகன் லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இவர்களை தவிர ‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் பிரபல நடிகை 13 வருடங்களுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேகனா ராஜ் சர்ஜா, ரஜினியின் ஜெயிலர் 2 மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பினார்.

அதாவது கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழில் ரிலீஸ் ஆன ‘காதல் சொல்ல வந்தேன்’ படம் மூலம் அறிமுகமானவர் தான், கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை மேக்னா ராஜ்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘உயர்திரு 420, நந்தா நந்திதா’ போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால், கன்னட மொழி படங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மூத்த மகனும், நடிகருமான சிரஞ்சீவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2018-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சிரஞ்சீவி உயிரிழந்தபோது மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில், மேக்னா சுமார் 13 வருடங்களுக்கு பின்னர் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.






