ஆப்கானிஸ்தான் செல்வதை தவிர்க்கவும் – ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமகாலத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்ராவெல்லர் (Smartraveller) வலைத்தளம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆலோசனையில், ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் போது பயங்கரவாதத் தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவல் போன்ற கடுமையான ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
எனவே, ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்ய நம்பகமான முகவர்களிடம் கூட முன்பதிவு செய்யக்கூடாது என்று ஸ்மார்ட்ராவெல்லர் (Smartraveller) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்த ஆஸ்திரேலியர்கள் உட்பட மேற்குலகைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு முதல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுற்றுலா கணிசமாகக் கூடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியும் பாதுகாப்பாக இல்லை என்று ஸ்மார்ட்ராவெல்லர் நீண்ட காலமாக எச்சரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் ஆயுத மோதல்கள் திடீரென ஏற்படக் கூடும். இதனால் விமான நிலையம் மற்றும் எல்லை மூடல்களால் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது எனவும் வலைத்தளம் சுட்டிக்காட்டுகிறது.





