அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் : ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதில், நடிகர் அஜித்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர், சத்தியமூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி ஆகியோரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பொலிஸார், சென்னை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு உடனடியாக அங்கு விரைந்து சென்று, முழு பகுதியையும் சுற்றிவளைத்து பாதுகாப்பு கொடுத்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு உதவியுடன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தீவிர சோதனையின் நடத்தினர்.
இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டும் அல்லது சந்தேக பொருளும் கண்டுபிடிக்கப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. ஆனால், அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அழைப்பு வந்த மெயில் ஐடி கண்டறிய சைபர் பிரிவு அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அஜித் தனது குடும்பத்துடன் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.






