இந்தியாவில் ஆபத்தான நிலையில் வசிக்கும் 30 மில்லியன் மக்கள்!
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நகரில் 30 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது பொது சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்த முற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய தகவல்களின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 344 ஆக இருந்தது. இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வெளிப்பாடு வரம்புகளின்படி ஆபத்தானதாகும்.
இதனைத் தொடர்ந்து துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய மக்கள், முகக்கவசங்களை அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். “எனக்கு மூச்சுத் திணறுகிறது” என எழுதப்பட்ட பதாதைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில் போராட்டம் செய்ய அனுமதியில்லை எனக் கூறிய காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.





