பிரபல நடிகர் அபிநய் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்
கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய அபிநய் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 44 வயதாகும் அபிநய் கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலமும் குன்றி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார்.

சில மாதங்கள் முன்பு வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் நடிகர் அபிநய் காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானார்.

அண்மையில் படவிழாவில் பங்கேற்ற அவர், தனக்கு உடல்நிலை மோசமாகி வருவதாக பேசியிருந்தார். இந்த நிலையில் தான் அவர் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)





