முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள்
மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட எதிரணிகளிலுள்ள சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்தக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளன.
இந்நடவடிக்கைக்கு பிறகும் எதிரணி கூட்டு தொடர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல்களில் எதிரணிகள் இணைந்தே ஆட்சி அமைந்துள்ளன.
எனவே, மாகாணசபைத் தேர்தலில் எதிரணிகள் ஒன்றிணைந்து, முதல்வர் பதவிக்காக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவேட்பாளர்களை களமிறக்கினால் வெற்றி பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.





