ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சீனா!
ஐரோப்பிய நாடுகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை நீட்டிப்பதாக சீனா இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 31, 2026 வரை விசா இல்லாத கொள்கை நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் சுவீடனும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, வணிகப் பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காலப்பகுதியை தொடர்ந்து தற்போது சுற்றுலாத்துறையை மேம்படுத்த சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுக்கு தற்காலிக விசா இல்லாத நுழைவை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டம் தற்போது பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.





