பிக்பாஸ் வரலாற்றிலேயே வித்தியாசமான வைல்ட் கார்ட்
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
20 பேருடன் தொடங்கிய பிக்பாஸில் தற்போது 16 பேர் உள்ளனர்.
இந்த வாரம் லாக்கர் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் அனைவருக்கும் தனித்தனி யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அணிந்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக பிக்பாஸில் வைல்டு கார்ட் எண்ட்ரி 50வது நாளின் அருகில் இருக்கும். ஆனால் இந்த சீசனில் 30 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் போட்டியாளர்களை அறிவித்துவிட்டது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இதுவரை எந்த சீசனிலுமே வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார் என்பதை முன்னரே அறிவிக்கப்பட்டதில்லை.
திடீரென உள்ளே குதிப்பார்கள். அல்லது வார இறுதியில் தொகுப்பாளர், அவர்களை வெல்கம் செய்து உள்ளே அனுப்புவார். இதுவே வழக்கமாக இருந்தது.
அப்படி இந்த சீசனில் வைல்டு கார்ட் மூலம் உள்ளே வரும் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சின்னத்திரை, வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகர் பிரஜின், மேலும் சின்னத்திரை பிரபலங்களான சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா ஆகியோர் உள்ளே வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரஜினும், சாண்ட்ராவும் ரியல் ஜோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பாலாஜி மற்றும் அவரது மனைவி ஒரே சீசனில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






