பொழுதுபோக்கு

இந்தவாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இறுதியாக ஆதிரை வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அடுத்ததாக வெளியேறப்போவது யார் என்ற விபரம் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெற்ற நபர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.

இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஒரு நபர் இந்த வார இறுதியில் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த 16 நபர்களில் இந்த வாரக் கேப்டனாக பிரவீன் தேர்வானதால் அவரை நாமினேஷன் செய்ய இயலாது.

இதேபோன்று பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ள கனி திரு, நாமினேஷன் ஃபிரீ பாஸ் வென்ற சுபிக்‌ஷா, இவர் காப்பாற்றிய வியானா என நான்கு பேரையும் நாமினேஷன் செய்ய இயலாது.

எஞ்சியவர்களில் பிக் பாஸ் போட்டியில் தொடரத் தகுதியற்ற 2 நபர்கள் யார் என்பதை சகப் போட்டியாளர்கள் தெரிவிக்க வேண்டும். இதில் அதிக வாக்குகளைப் பெற்ற நபர் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியலில் வைக்கப்படுவார்.

அந்தவகையில் இந்த வாரம் இப்பட்டியலில் விஜே பார்வதி, கமுருதீன், கானா வினோத், கலையரசன், அரோரா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.

இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் இந்த வாரம் முழுக்க வாக்குச் செலுத்த வேண்டும். அதிக வாக்குகளைப் பெற்று மக்கள் ஆதரவைப் பெற்றவர் பாதுகாக்கப்படுவார்.

குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் தகுதியற்றவர் என உறுதிசெய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறும் நபர் யா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்