ரஷ்யாவிற்காக உளவு பார்த்த மூவர் லண்டனில் கைது!

ரஷ்ய உளவுத்துறை சேவைகளுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் மூன்று பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது.
48, 45 மற்றும் 44 வயதுடைய ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையின் தலைவர் கமாண்டர் டொமினிக் மர்பி (Dominic Murphy) “வெளிநாட்டு உளவுத்துறை சேவைகளால் ‘பிரதிநிதிகள்’ என்று நாங்கள் விவரிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.
மேலும் இந்த கைதுகள் இந்த வகையான நடவடிக்கையை சீர்குலைக்கும். இங்கிலாந்தில் ஒரு வெளிநாட்டு அரசின் சார்பாக குற்றச் செயல்களைச் செய்யத் தூண்டப்படக்கூடிய எவரும் மீண்டும் சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.