ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரிக்கப்படும் ஊதியம் – அரை மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவர்!

இங்கிலாந்தில் ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பின்படி ஒருமணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியமானது £13.45 பவுண்ட்ஸ் ஆகவும் லண்டனில் £14.80 பவுண்ட்ஸ்  ஆகவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய லண்டனில் 95 பென்ஸ் அதிகரிக்கப்படும் அதேவேளை பிற இடங்களில் 85 பென்ஸ் அதிகரிக்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையின் அடிப்படையில் ஊதிய உயர்வை கணக்கிடும் அறக்கட்டளை, முழுநேரமாக வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஆண்டிற்கு £2,418 பவுண்ட்ஸும், லண்டனில் பணிப்புரியும் ஒருவர் £5,050 பவுண்ட்ஸும் அதிகமாக பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

குறைந்த ஊதியம் பெறும் பல தொழிலாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சிரமப்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ள நிலையில், வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த ஊதிய உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 6 times, 6 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்