போராட்டங்கள் வெடித்ததால் பெருவின் தலைநகர் லிமாவில் அவசரநிலை பிரகடனம்
பெருவின் தலைநகர் லிமாவிலும்(lima) அந்த நாட்டின் கல்லாவ் மாநிலத்திலும் 30 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் குற்றச் செயல்களைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெருவின் ஜனாதிபதி ஜோஸ் ஜெரி(José Jerí) தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு முதல் அவசரநிலை நடப்புக்கு வந்ததாகவும் அமைச்சர்கள் குழு இந்நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி காவல்துறையுடன் சேர்ந்து ஆயுதப் படைகளைப் பணியில் ஈடுபடுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
“குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளில் முன்னின்று போராடும் அணுகுமுறைக்கு மாறுகிறோம். இதன் மூலம் அமைதி, மில்லியன்கணக்கான பெருவின்வியர்களின் நம்பிக்கை ஆகியவற்றை நாம் மீண்டும் பெற முடியும்,” என்று ஜெரி தொலைக்காட்சி உரையில் விவரித்தார்.
ஜெரி, இம்மாதம் பெருவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். முந்தைய ஜனாதிபதி டினா பொலுவார்ட்டே(Tina Polwarte) பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஜெரி பொறுப்பேற்றார். சென்ற வாரம் அவர் தமது புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார். குற்றச் செயல்களைக் கையாள்வதற்கு முன்னுரிமை வழங்கப்போவதாக ஜெரி உறுதியளித்தார்.
பல வாரங்களாக Gen-Z(Generation Z) ஆர்வலர்கள் தலைமையிலான ஊழல் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பாக அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களால் பெருவின்வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இப் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார், 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.





