பிரித்தானியாவில் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் 1.1 மில்லியன் ஓய்வூதியதாரர்கள்!

பிரித்தானியாவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து ஈட்டப்படும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக HMRC இன் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
புதிய புள்ளிவிபரங்களின்படி, நடப்பு நிதியாண்டில் 66 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 1,160,000 பேர் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளனர்.
இது கடந்த ஆண்டு 1,090,000 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 953,000 ஆகவும் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்த எதிர்பார்க்கப்படும் 2,640,000 பேரில் 44 சதவீதமானவர்கள் ஓய்வூதியதாரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் முடக்கப்பட்ட வரி வரம்புகள் காரணமாக சேமிப்பு வருமானத்திற்கு வரி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.