பிரித்தானியாவில் உயரும் பணவீக்கம் – பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலை அதிகரிப்பு!
பிரித்தானியாவில் பணவீக்கம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 3.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது 4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் அதிகரிப்பானது, கடந்த மாதம் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் எதிரொலியாக இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி வரும் நாட்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பணவீக்கமானது வரும் மாதங்களில் கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கும் என்று பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.
பணவீக்கத்தின் தற்போதைய உயர்வானது வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பை வழங்கும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.





