பொழுதுபோக்கு

இலங்கையின் நாமத்தை உலக அளவில் ஓங்கி ஒலிக்கச்செய்த இளைஞன்…

யூடியூப் என்பது இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தினருக்கு நல்ல பொழுதுபோக்காகவும், பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தளமாகவும் காணப்படுகின்றது.

இதை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

சமையல், அழகுக்கலை, தையல், பொழுதுபோக்கு, ரீல்ஸ், சினிமா என பல பிரிவுகளில் யூடியூப்பை மக்கள் பயன்டுத்துகின்றார்கள்.

அந்த வகையில் இலங்கையிலும் ஏராளமானோர் யூடியூப் பயனர்களாகவும் இருக்கின்றனர் பணம் தேடுவதற்கான தளமாகவும் பயன்படுத்துகின்றனர்.

இதில் வெற்றி பெற்ற ஒருவரைப்பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகின்றோம்.

யூடியூப் சேனலான Wild Cookbookஐ உருவாக்கிய சரித் என். சில்வா தான் இலங்கையில் 10 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிய முதல் இலங்கையராக உள்ளார்.

2020 இல் தனது சேனலைத் தொடங்கியதிலிருந்து, சரித் 600க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார், 4 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளார்.

அவரது தனித்துவமான வெளிப்புற சமையல் மற்றும் இலங்கை சமையல் குறிப்புகள் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.

இந்த மைல்கல் இலங்கையின் YouTube வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.

மேலும் இவர் ஒரு சிங்களவராக இருந்தாலும் அனைத்து மதங்களுக்கும், மொழிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தனது சமையல் மூலம் அனைவரையும் மகிழ்விப்பதுடன் சிறந்த பொழுதுபோக்கையும் தருகின்றார்.

இவர் இலங்கையில் ஒரு ஹோட்டலையும் நடத்துகின்றார். இவர் சமையற் கலையில் இலங்கையின் நாமத்தை உலக அளவில் ஓங்கி ஒலிக்கச்செய்த பெறுமை இவரையே சேரும்.

நாளுக்கு நாள் உலகளவில் பெயரையும் புகழையும் பெற்று வெற்றிப்பாதையின் உச்சத்துக்கே செல்லும் இலங்கை இளைஞன் சரித்துக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்….

(Visited 5 times, 5 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்