விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயம் முடிந்ததை உறுதி செய்த ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக பேச்சுக்கள் எழுகின்றன.
ஆனால் இதை மறுத்து இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை, உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
ஆனால் அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளிவந்து இவர்களது காதலை உறுதிப்படுத்துகின்றன.
இந்த நிலையில் தான், சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. திருமணத்தை அடுத்த வருடம் பிப்ரவரியில் நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.
இதுவரை மௌனம் காத்து வந்த ராஷ்மிகா முதன்முறையாக இது குறித்து பேசியுள்ளார்.
அதாவது, தனது அடுத்த படமான தம்மா படத்தில் ப்ரோமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர் வாழ்த்துக்கள் கூற, அதற்கு அவர் குழப்பம் ஆனார்.
ராஷ்மிகா புதிதாக தொடங்கி இருக்கும் perfume தொழிலுக்காக தான் வாழ்த்து கூறுவதாக தொகுப்பாளர் விளக்கம் சொன்னார். ‘வேறு எதாவது காரணம் இருக்கிறதா’ என தொகுப்பாளர் கேட்க, ‘இல்லை இல்லை’ என கூறிய ராஷ்மிகா, ‘நிறைய இருக்கிறது, ஏனென்றால் பல விஷயங்கள் நடக்கிறது. உங்கள் வாழ்த்துக்களை அவை அனைத்துக்கும் என எடுத்துக்கொள்கிறேன்’ என கூறுகிறார்.
ராஷ்மிகாவின் இந்த பதில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை மறைமுகமாக உறுதி செய்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.





