இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு குட் பை சொன்னது யார்?
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்த போட்டி ஆரம்பமான நிலையில், யோகா ஆசிரியரான நந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பவர்களுடன் சண்டையிட்டு, தாமாக முன்வந்து வெளியேறினார்.
மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இயக்குநர் பிரவீன் காந்தி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷனில் அரோரா, கமுருதீன், அப்சரா உள்ளிட்டோர் இருந்தனர்.
மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் அப்சரா வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும்.






