ஜீ தமிழ் “அண்ணா” சீரியலில் அதிரடி மாற்றம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா. இயக்குநர் துர்கா சரவணன் இயக்கத்தில் அண்ணன் மற்றும் தங்கை பாசத்தை மையப்படுத்தி குடும்பக் கதையோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த கதை தற்போது வரையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் சண்முகத்தின் முதல் தங்கையாக நடித்து வருபவர் தான் சுனிதா. இவர் ரத்னா அறிவழகன் என்ற ரோலில் இந்த சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ஹாய் என் இன்ஸ்டாகிராம் நண்பர்களே! சில தனிப்பட்ட காரணங்களுக்காக நான் அண்ணா சீரியலிலிருந்து விலகுகிறேன். நான் இனிமேல் ரத்னாவாக தொடரவில்லை. இந்த அழகான பயணத்தில் ரத்னா கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் உங்கள் எல்லோரையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ரத்னாவாக நடிக்க வருபவருக்கு எனது வாழ்த்துகள். அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
சுனிதா ஸ்ரீனிவாசன் விலகியதைத் தொடர்ந்து ரத்னாவாக நடிக்க வரும் நடிகை குறித்து இதுவரையில் அறிவிப்பு வரவில்லை. ரத்னாவாக நடிக்கும் அந்த நடிகை யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






