தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தீபாவளி ; மோதிய படங்களில் வெற்றி யாருக்கு?
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு பெரிய தலைகளின் திரைப்படங்கள் திரைக்கு வருவதுதான் வழமையாக இருந்தது.
ஆனால் இந்த தீபாவளி சற்று வித்தியாசம் தான். அதாவது இம்முறை இளம் ஹீரரோக்களுக்கு ஒரு வாய்ப்பாக மாறிவிட்டது.
இளம் தலைமுறை இயக்குநர்களும் நடிகர்களும் இம்முறை தீபாவளியில் மோதியுள்ளனர். இது தமிழ் சினிமாவுக்கு சற்று வித்தியாசமான மற்றும் புதுமையான பண்டிகைதான்.

டியூட், பைசன், டீசல் – மூன்றும் வேறு வேறு கதை களங்களை கொண்ட படங்கள் தீபாவளி ரேசில் குதித்துள்ளன.
டியூட்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட், லவ் டுடே வெற்றிக்கு பிறகு அவர் மீண்டும் முயன்ற ஒரு காதல் காமெடி படம். கதை ஒரு இளைஞன் வாழ்க்கையையும், காதலையும், சமூகம் திணிக்குற எதிர்பார்ப்பையும் பற்றியது. முதல் பாதி சிரிப்பு, க்யூட் ரொமான்ஸ் – எல்லாமே இருந்தது, ஆனா இரண்டாம் பாதி சற்று சறுக்கிவிட்டது.
குறிப்பாக டியூட் படம் இளம் சமுதாயத்திற்கு ஏற்றால் போல் இருந்தாலும், திருமணத்திற்குப்பிறகு ஒரு ஆண் இப்படி செய்வாரா?இது நடக்குமா? என்று கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் சுமார் 20–25 கோடி வரை வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைசன்
மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணைந்த பைசன் சமூக அரசியலை கபடி மைதானத்தோட இணைத்த கதை. துருவ் விக்ரம் நடித்த மணத்தி கணேசன் பாத்திரம், ஒரு அடையாளத்திற்காக போராடும் இளைஞன் — அதில் சாதி அரசியல், ஊராட்சி சண்டை எல்லாம் கலந்தது.
பைசன் தான் தெளிவான கருத்துடன் தீபாவளிக்கு விருந்து வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. இப்படம் 60–70 கோடி வசூலுடன், தீபாவளி வின்னராக காத்திருக்கின்றது.

டீசல்
ஹரிஷ் கல்யாண் நடிப்பில், ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் வந்த டீசல், 1970–80களில் சென்னை கடற்கரை மீனவர்களின் வாழ்வை பற்றிய கதை. கடல், அரசியல், கருப்பு சந்தை எண்ணெய் வியாபாரம் — இந்த மூன்றையும் இணைத்து ஒரு தரமான கதையை சொல்வதற்கான முயற்சி.
முதல் பாதி நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதி கதை திசை மாறி ரொமான்ஸ் பக்கம் சென்றது. அது இப்படத்திற்கு பொருந்தவில்லை. ரசிகர்கள் சப்போர்ட் பண்ணினாலும், சற்று விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன. சுமார் 15–20 கோடி வரை தான் இப்படம் கலெக்ஷனை அள்ளும்.
மூன்று படங்களிலும் வித்தியாசம் இருந்தாலும் ரசிகர்கள் பைசனுக்குத்தான் முதலிடம் என்கின்றனர்.






