தைவானின் 60,000 வரைப்படங்களை பறிமுதல் செய்த சீனாவின் சுங்க அதிகாரிகள்!
சீனாவின் சுங்க அதிகாரிகள் 60000 தைவான் (Taiwan) வரைபடங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்றுமதிக்காக வடிவமைக்கப்பட்ட இந்த வரைபடங்கள், சீனாவின் “தேசிய ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை” ஆபத்தில் ஆழ்த்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென் சீனக் கடல் முழுவதும் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பெய்ஜிங் பயன்படுத்தும் ஒன்பது கோடுகள் கொண்ட கோடும் குறித்த வரைப்படத்தில் அடையாளப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுடன் பல முக்கியமான தீவுகள் அந்த வரைபடத்தில் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சீன மற்றும் ஜப்பானிய பிரதேசத்தை பிரிக்கும் கடல் எல்லையும் குறித்த வரைபடத்தில் அடையாளப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சீனா, தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக கருதுகிறது. இதற்கு தைவான் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் சர்ச்சைக்குரிய கடற்பகுதியாக தைவான் ஜலசந்தியில் இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் போக்கும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





