பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி காலமானார்
பழம்பெரும் பாடகி மற்றும் நடிகையான பாலசரஸ்வதி தேவி (வயது 97), வயது மூப்பினால் இன்று காலமானார்.
கடந்த 2 – 3 நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“சதி அனுசுயா” எனும் திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான பாலசரஸ்வதி தேவி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 2,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த நிலையில், பாடகி பாலசரஸ்வதி தேவியின் மறைவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)





