உலகம்

மடகஸ்காரின்(Madagascar) ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

இன்று(14) மடகாஸ்கரில்(Madagascar) அரசு அதிகாரம், இராணுவ ஜெண்டர்மேரி(gendarmerie) மற்றும் தேசிய காவல்துறை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இராணுவ கவுன்சிலால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மலகாசி(Malagasy) இராணுவ அதிகாரி கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா(Michael Randrianirina) அறிவித்தார்.

மலகாசி மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பு இடைநிறுத்தப்பட்டு புதிய தேசிய கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக ராண்ட்ரியானிரினா கூறினார்.

செனட், உயர் அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் தேசிய சுதந்திர தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய பொது நிறுவனங்களைக் கலைப்பதாகவும் அவர் அறிவித்தார்.

மடகாஸ்கர் நாட்டில் நிலவும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை (Andry Rajoelina) பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஜனாதிபதி, சட்டமன்றத்தைக் கலைப்பதாக ஆணை பிறப்பித்திருந்த நிலையிலும், நாடாளுமன்றம் தனது வாக்கெடுப்பை நடத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மின்சார நெருக்கடி மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் கடந்த பல வாரங்களாக ‘ஜென்-Z'( Generation Z) இளைஞர்கள் குழுவினர் போராட்டம் நடத்திவருவதுடன் ஜனாதிபதியையும் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு நேற்று(13) அந்த நாட்டின் உயர்மட்ட இராணுவப் பிரிவொன்று ஆதரவளித்ததையடுத்து, ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார்.

இந்தநிலையில், ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா, தான் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பேஸ்புக் ஊடாக ஆணை பிறப்பித்தார். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆணையை நிராகரித்து, ஜனாதிபதி மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்ற வாக்களித்துள்ளனர்

மேலதிக செய்திகள்

Tensions in Madagascar Air France suspends flights

(Visited 43 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்