அண்டார்டிகா கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
அண்டார்டிகா கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிலி வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதி உலகின் மிகவும் கரடுமுரடான பகுதி எனவும் குறிப்பிடப்படுகிறது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே அந்த எச்சரிக்கை மீளப் பெறப்பட்டது.
(Visited 3 times, 1 visits today)





