வடமேற்கு பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கையில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் ராணுவ வாகனம்மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 30 பேரைச் சுட்டுக்கொன்றதாக இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி, பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகே பாகிஸ்தான் ராணுவ வாகனம் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது, தெஹ்ரிக் -இ-தலிபான் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
அதில், ஒன்பது பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் இரு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைக்காக பாதுகாப்புப் படையினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் சர்தாரி பாராட்டு தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான வெற்றி அதன் அசைக்க முடியாத உறுதியைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.