கடத்தல் வழக்கு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமின்
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்திய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள மதுபான விடுதியில் ஐடி ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்தியதாக இவர் மீது முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியானது.
இதையடுத்து, லட்சுமி மேனன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், தங்களுக்குள் சுமூக தீர்வு ஏற்பட்டதாக ஐடி ஊழியர் தரப்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் உத்தரவிட்டார்.
(Visited 8 times, 1 visits today)





