பொழுதுபோக்கு

பிரபல நடிகருக்கு எமனாக வந்த நாய்…

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பிரபல பாடகரும் – நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா உயிரிழந்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பட்டி எனும் இடத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி, இவர் பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் தலை மற்றும் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

இவருடைய உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்ததை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் ராஜவீரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர் .

ஆனால் சிகிச்சை ராஜ்வீர் ஜவாண்டா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

35 வயதே ஆகும் ராஜ்வீர் ஜவாண்டாவின் பாடல்கள் மற்றும் இவர் நடித்த படத்திற்கு பல பஞ்சாபி ரசிகர்கள் உள்ளனர்.

சிறுவயதில் இருந்தே காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருந்த போதிலும், இசை மீது இவருக்கு இருந்த நாட்டம் மற்றும் இவருடைய குரல் வளம் இவரை ஒரு பாடகர் ஆக மாற்றியது.

பின் நடிகராகவும் மாறினார். தன்னுடைய ஆல்பம் மூலம் இசை பயணத்தை துவங்கி மிகக்குறுகிய காலத்தில் கடின உழைப்பால் சிறந்த பாடகராகவும், நடிகராகவும் உயர்ந்தார். இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி இவர் உயிரிழந்திருப்பது பாஞ்சாபி திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்