ஆஸ்திரேலியாவில் இளைஞர்களால் நெருக்கடி! பல்பொருள் அங்காடிகளில் திருட்டு அதிகரிப்பு
ஆஸ்திரேலியாவில் இளவயதினர் பல்பொருள் அங்காடிகளில் திருடுவதும், பொருட்களின் விலையை மாற்றுவதும் அதிகரித்து வருவதாக மோனாஷ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை திருடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
27 சதவீதம் பேர் பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துச் செல்வதாகவும், 30 வீதமானோர் தயாரிப்புகளின் விலையை மாற்றுவதாகவும், 32 சதவீதம் பேர் சுய சேவை செக்அவுட்களில் பொருட்களை ஸ்கேன் செய்வதில்லை என்றும், 36 சதவீதம் பேர் குறைந்த விலையில் பொருட்களை ஸ்கேன் செய்வதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் சில்லறை திருட்டு 27.6 சதவீதமாக அதிகரித்துள்ளது, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 595,660 சில்லறை திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான திருட்டுக்களை 18 முதல் 34 வயதுடையவர்களில் 56 சதவீதமானோர் நியாயப்படுத்தியுள்ளர். அதேவேளை 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானோர் திருட்டு நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஆய்வினை மேற்கொண்ட தலைவரான ஸ்டெபனி அட்டோ, சில்லறை திருட்டை நியாயப்படுத்த முடியும் என்று நினைக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.





