பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பலூன் அக்கா… யார் இந்த அரோரா சின்க்ளேர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்று ஆரம்பமாகியது. இந்த 9 ஆவது சீசனில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலம் அரோரா சின்க்ளேர் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த அரோரா சேலத்தில் பாடசாலை படிப்பை முடித்தார். தாவரவியலில் பட்டப்பட்டிப்பை முடித்தப் பின் சென்னைக்கு வேலைக்காக வந்த அரோரா அந்த வேலையில் வந்த சம்பளம் பற்றாத காரணத்தினால் மாடலிங்-க்குள் நுழைந்தார்.
பாரம்பரிய உடையில் மாடலிங் செய்வதற்கு ஏற்ற உடலமைப்பு இல்லாததால் கிளாமரை நோக்கி நகர்ந்தார். தனது 21 வயதில் மாடலிங் துறைக்கு வந்தவர் அரோரா. இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டுவந்தார்.
தற்போது இவருக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். மாடலிங் தவிர்த்து ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அரோரா ஒரு மாதத்திற்கு ரூ 26 லட்சம் வரை சம்பாதிப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின.
இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக புகைப்படங்களை வெளியிடுவது குறித்து அரோரா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் அங்கீகரிக்கப்படாத டேட்டிங் ஆப்களை விளம்பரப் படுத்தியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்.
மேலும் சில ஆபாச கருத்துக்களுக்கு ஆபாசமாகவே பதில் கொடுத்து அனைவராலும் பலூன் அக்கா என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் குறித்த சர்ச்சைகள் தான் நமக்கு தெரியும். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல விடயங்களும் உள்ளன. திய விடயங்களும் உள்ளன. அந்த வகையில் இவரது ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்த நமக்கு அவரது இன்னொரு முகமும் இந்த பிக்பாஸ் வீட்டில் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.