இலங்கை

இலங்கையில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை!

மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.பீ.அன்பார்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில்  காவல்துறை அவசர அழைப்பு இலக்கமான 119 மற்றும் சிறுவர் நன்னடத்தைகள் திணைக்களம் போன்றவற்றிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

இதன் ஒருபகுதியாக சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையை பெறுவதற்காக பாதிக்கப்பட்ட  மாணவியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரான 18 வயது இளைஞனை தண்டனை சட்டக் கோவை 364 கீழ் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!