அடுத்த ஆட்டத்திற்கு ரெடியாகும் அஜித்
இந்த வருடம் டிசம்பர் மாதம் மலேசியாவில் ஆரம்பமாகவுள்ள ஆசியன் லீ மேன்ஸ் தொடரில் அஜித் குமார் பங்கேற்கவுள்ளார்.
இதில் அஜித்துடன் அவரது அணியைச் சேர்ந்த பிரபல ஃபார்முலா – 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல் ஆகியோர் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித்துடன் நரேன் இணைந்து ரேஸ் செய்யவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது.
தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றனர்.
சில நாள்களுக்கு முன் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் 3 ஆம் இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.






