ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சம் – ஒன்றுக்கூடிய தலைவர்கள்!

டேனிஷ் விமான நிலையங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் தொடர்ந்து நடந்த தொந்தரவான ட்ரோன் சம்பவங்களைத் தொடர்ந்து, ஐரோப்பிய தலைவர்கள் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோபன்ஹேகனில் ஒன்றுக்கூடிய தலைவர்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க ஐரோப்பா எவ்வாறான தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டென்மார்க் வான்வெளியில் ரஷ்யாவின் ட்ரோன்கள் பறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக விமான சேவைகள் தடைப்பட்டிருந்தன.

அதேபோல் ரஷ்யா உக்ரைனை அடுத்து பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுப்பை நடத்தலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் 3 முதல் 5 ஆண்டுகளில் ஐரோப்பாவின் வேறு இடங்களில் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் நேட்டோ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில்  அச்சம் எழுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள பிரத்தியேகமாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் இன்றைய மாநாடு முக்கிய பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்