கரூரில் நடந்த கோரம் : முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை
தமிழக வெற்றிக் கழகம் கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவொன்றை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நியமித்துள்ளார்.
அந்த குழுவின் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் இதற்கு முன்பு மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது.
ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.






