ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு கௌரவம்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு சிறப்பான வரவேற்பும் செங்கோல் கெளரவமும் வழங்கப்பட்டது, தமிழ் இசை மற்றும் தெற்காசிய கலைஞர்களுக்கு பெருமை சேர்த்தது.
தமிழ் சினிமாவின் லெஜெண்ட் இசையமைப்பாளர் தேவாவுக்கு ஆஸ்திரேலிய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.

கானா பாடல்களாக இருந்தாலும், மெலடியாக இருந்தாலும் தன்னுடைய இசையால் ரசிக்க வைத்தவர் இசையமைப்பாளர் தேவா.
கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, பிறந்து வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பக்கத்தில் இருக்கும் குடிசை பகுதி தான்.

இயல்பாகவே சென்னையில் காசிமேடு, ராயபுரம், வில்லிவாக்கம் பகுதிகளில் கானா பாடல்கள் தேவாவுக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்று.
கானா மன்னன் என பாராட்டப்பட்ட தேவா, 400-க்கும் அதிகமான படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இந்நிலையில் தேவாவுக்கு ஆஸ்திரேலிய நாட்டில் கிடைத்துள்ள கௌரவம் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் தேவா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.






