அஜித்துக்கு ஜோடியாக யுவினா பார்த்தவி?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா பார்த்தவி.
குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார்.
தற்போது ரைட் படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதன்போது, பத்திரிக்கையாளர் ஒருவர்,
“நடிகை மீனா ரஜினிகாந்த் சாருடன் குழந்தை நட்சத்திரமாக நடிச்சாங்க, பின் ஹீரோயினாகவும் அவருடன் நடித்தார்கள். அந்தமாதிரி, பிற்காலத்தில், அஜித்துடன் ஜோடியாக நடிப்பீர்களா? இல்லை, அவருடன் நடிக்கமாட்டீர்களா?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு யுவினா, எனக்கு தெரிந்து காலம் ரொம்பவும் மாறிடிச்சி,
அதற்கு காலம் இருக்கு. இதை மக்கள் ஏத்துப்பாங்கன்னா நல்ல கதை அமையட்டும். நடிப்பேன் என்பதை யுவினா தெரிவித்துள்ளார்.