அமெரிக்கா செல்லும் இலங்கை ஜனாதிபதி – பல்வேறு அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளையதினம் அமெரிக்கா நோக்கி பயணமாகவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அவரின் விஜயம் அமைந்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா சபையில் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இலங்கையின் சமகால முன்னேற்றம் குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளார்.
அதேவேளை அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 26ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





