நடிகை ஸ்ரேயா சரண் எடுத்துள்ள அதிரடி முடிவு

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஸ்ரேயா சரண். திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், மற்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை ஸ்ரேயா சரண் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில்,
“ரசிகர்களுக்கு விருப்பமானதை கொடுத்தால் அவர்கள் நம்மை விரும்புவதை விட மாட்டார்கள். அடுத்தடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வகையில் நடிக்க போகிறேன்” என ஸ்ரேயா கூறியுள்ளார்.