ரோபோ ஷங்கர் வீட்டில் இரு தினங்களில் நடக்கவிருந்த விஷேசம்

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். பல படங்களில் காமெடி ரோலில் நடித்து கலக்கினார்.
கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் உடல்நிலை சரியாகி படங்கள் நடிக்க தொடங்கியிருந்தார். திடிரென மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேற்று இரவு உயிரிழந்தார்.
பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். ரோபா ஷங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சினிமாத்துறையை சேர்ந்த பலரும் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு நாளில் ரோபோ ஷங்கர் விட்டில் விசேஷம் நடக்கவிருந்த தகவலை கவிஞர் சினேகன் பகிர்ந்துள்ளார். அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய சினேகன், ரோபோ ஷங்கரின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது. அவரின் முதல் மேடையில் இருந்து நான் பயணம் செய்து வருகிறேன், வருத்தமாக இருக்கிறது.
யாருடைய மனமும் வாடாத அளவுக்கு நடந்துக்கொள்வார். உடல்நிலையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அவரின் பேரனுக்கு நாளை மறுநாள் காதுகுத்து வைத்திருந்தார்.
அந்த நேரத்தில் இப்படியான துயரம் நிகழ்ந்திருப்பது கூடுதல் வேதனையை தருகிறது என்று சினேகன் தெரிவித்துள்ளார்.